தோனிக்கு ராஞ்சி பிறந்த வீடு என்றால், சென்னை அவருக்கு புகுந்த வீடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வளர்ப்பு பிள்ளையை  “தல தோனி” என்று தான் செல்லமாக  அழைக்கின்றனர்.

dhoni csk

சென்னையில் போட்டி முடிந்த அடுத்த நாள், அவர் சென்ற இடமும், அவர் சந்தித்த நபர்களும் தான் இப்பொழுது கிரிக்கெட் வட்டாரங்களில் பல விஷயங்கள் கிசு கிசுக்க வழிவகுத்துள்ளது.

தோனி இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட்டின் கார்ப்பரேட் ஆபீஸ் சென்றுள்ளார், அங்கு ஸ்ரீநிவாசன் மற்றும் சில உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார். இந்நிகழ்வை அவர்கள் தங்களின் பேஸ் புக் பக்கத்தில் ” மஹிந்திரா சிங் தோனி (வைஸ்-ப்ரெசிடென்ட் மார்க்கெட்டிங், தி இந்தியா சிமெண்ட்ஸ்)  கார்ப்பரேட் ஆபீசுக்கு வருகை தந்தார், ஐ சி எல் குடும்பத்துடன் இருந்தார்.” என்ற தகவலையும்,மேலும் அங்கு அவர் உணவு அருந்தியது, ஜிம் சென்றது, பின் சில அதிகாரிகளுடன் செலஃபீ எடுத்து என்று சில போட்டோக்களையும் அப்லோட் செய்துள்ளார்கள்.

https://www.facebook.com/pg/TheIndiaCements/photos/?tab=album&album_id=1100953186673719

MSD with N.Srinivasan
MSD poses for a photo with ICL staff

 

MSD visiting the Indoor Gym Facility

இந்தியா சிமெண்ட்ஸ் தான் சிஎஸ்கே அணியின் உரிமையாளர்கள் என்பது நாம் அறிந்த விஷயமே. இரண்டு வருட சஸ்பென்க்ஷனுக்கு பிறகு மீண்டும் வரப்போகிறது சென்னை அணி.

இதை பற்றி சிஎஸ்கே தரப்பிடம் விசாரித்த பொழுது ” சென்னையில் இருந்த அவர் ஆபீஸ் வந்தார். இங்கு திரு. சீனிவாசன் அவர்களை சந்தித்தார். தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடவே நாங்களும் ஆசை படுகிறோம், எனினும் பிசிசிஐ, ஐபில் பற்றி  என்ன முடிவு கூறப்போகிறார்கள் என்று தான் நாங்களும் ஆவலாக காத்துக்கொண்டுஇருக்கிறோம்.” என்றனர்.