fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

புதுமணத்தம்பதிக்கு சூப்பர் விருந்து கொடுத்த தோனி.. ரொம்ப நாள் ஆச்சே இப்படி பார்த்து!

Sports | விளையாட்டு

புதுமணத்தம்பதிக்கு சூப்பர் விருந்து கொடுத்த தோனி.. ரொம்ப நாள் ஆச்சே இப்படி பார்த்து!

தன் லெக் ஸ்பின் வாயிலாக இந்திய மற்றும் ஆர் சி பி அணியில் கலக்கி வருபவர் யுவேந்த்ர சாஹல். 30 வயதாகும் சஹாலுக்கும் நடன இயக்குநர் தனஸ்ரீ வர்மா என்பவருக்கும் ஹரியானா மாநிலம் குருகிராமில் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சாஹல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக UAE சென்றார். தனஸ்ரீயும் போட்டிகளை காண சென்றார். பின்னர் ஆஸ்திரேலிய தொடரில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி முடித்திவிட்டு இந்திய திரும்பினார் சாஹல்.

கொரோனா தொற்று காரணமாக குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தது திருமணம் நடந்தது. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அப்டேட்டுகளை வரிசையாக பதிவிட்டு வருகிறார் சாஹல். இந்த ஹனிமூனுக்காக துபாய் சென்றுள்ளனர்.

அங்கு இந்த ஜோடிக்கு முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இரவு உணவு விருந்து அளித்துள்ளனர்.

dinner

நால்வரும் இருக்கும் புகைப்படங்களை சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டனர். இந்த போட்டோஸ் வைரலாகி வருகின்றது.

dhoni

dhoni

dhoni

dhoni

Continue Reading
To Top