Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த இரண்டு ஜாம்பவான்கள்! வருத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

இந்தியாவின் முன்னணி வீரர்களான தோனி மற்றும் ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட்டின் மோகம் என்றுமே அதிகரித்தவண்ணமே தான் உள்ளது. காவஸ்கர், கபில், சச்சின், தோனி, கோலி என வீரர்கள் மாறினாலும் ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்தபாடில்லை. அதிக நாட்களாக இந்திய டீம் களம் இறங்காமல் இருந்தது இதுவாக தான் இருக்கும். இதற்கு கொரோனா அபாயம் தான் உபயம். ஐபிஎல் போட்டிகள், டி 20 போட்டிகள் என அனைத்தும் அட்டவணை மாறியுள்ளது.

உலகக்கோப்பை தோல்விக்கு பின் எந்த வித கிரிக்கெட்டிலும் தோனி ஆடவில்லை. UAE யில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதனால் தோனி மீண்டும் வலை பயிற்சியில் ஈடுபட்டார். ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் நேற்று சுதந்திர தினத்தன்று சென்னையில் இருந்த அவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக இன்று 7.29 முதல் நான் ரிட்டையர் ஆனதாக வைத்துக்கொள்ளுங்கள் என அசால்ட்டாக விடியோவை பதிவிட்டுள்ளார்.

MSD

39 வயதான தல தோனி 538 சர்வதேச போட்டிகளில் விளையாடி 17266 ரன்கள் குவித்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் 38 அவெரேஜுடன் 4876 ரன்கள், 350 ஒரு நாள் போட்டிகளில் 10773 மற்றும் 98 டி 20 போட்டிகளில் 1282 ரன்கள் குவித்துள்ளார்.

தல தோனியின் அறிவிப்பின் சில நிமிடங்கள் கழித்து சின்ன தல சுரேஷ் ரெய்னா தானும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்ஸ்டாக்ராம்மில் அறிவித்தார். 33 வயதாகும் ரெய்னா சிறந்த பீல்டர், டி 20 அதிரடி பேட்ஸ்மான், பந்து வீசும் ஆல் ரவுண்டர். இவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது பலருக்கும் குழப்பம் தான். அடுத்த டி 20 உலகக்கோப்பை இந்தியாவில் தான் நடக்கும், எனினும் ரெய்னா இந்த முடிவை எடுத்துவிட்டார்.

Raina

மூன்று வித பார்மட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ரெய்னா ஆவர். 18 டெஸ்ட் போட்டிகளில் 768 ரன்கள், 226 ஒரு நாள் போட்டிகளில் 5615 ரன்கள் மற்றும் 78 டி 20 போட்டிகளில் 1605 ரன்கள் எடுத்துள்ளார்.

thala chinna thala

தல மற்றும் சின்ன தல இருவரின் இந்த முடிவு சுதந்திர தினத்தன்று வெளியானது கூடுதல் ஸ்பெஷலாக அமைந்தது.

Continue Reading
To Top