Connect with us

Cinemapettai

‘தல’ என்ற செல்லப் பெயர் கிடைச்சது ஸ்பெஷல் தான் – தோனி நெகிழ்ச்சி.

Sports | விளையாட்டு

‘தல’ என்ற செல்லப் பெயர் கிடைச்சது ஸ்பெஷல் தான் – தோனி நெகிழ்ச்சி.

மற்றோரு கிரிக்கெட் சீசன், மீண்டும் சி எஸ் கே பிளே ஆப் விளையாட தகுதி பெற்றுள்ளது. இம்முறை சின்ன சொதப்பல் கூட இல்லாமல், ஆரம்பம் முதலே அசத்தி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் மற்றும் வீரர்களுக்கு தமிழகத்தில் மட்டுமன்றி உலகளவில் ரசிகர்கள் உண்டு. இம்முறை பேட்டிங்கில் தோனி, பந்துவீச்சில் தாஹிர் தான் அதிகம் அசத்தி வருகின்றனர்.

சென்ற மேட்ச் அதிரடியாக ஆடிய தோனி  ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். அந்த ப்ரெசென்ட்டேஷன் சமயத்தில் தான் தல என்ற பெயர் பற்றி தோனியிடம் கேட்கப்பட்டது.

” இவ்வளவு பெரிய செல்லப் பெயர் கிடைச்சது நிஜமாகவே ஸ்பெஷ்ல் தான். இது எனக்கு அவர்கள் கொடுத்த மிகப்பெரிய செல்லப்பெயர். இது உண்மையாகவே சிறப்பாக இருக்கிறது. ஆரம்ப நாட்களில் எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்காக உருவாக்கப்பட்ட பாடலில்தான் தல என்ற வார்த்தை இருந்தது. அப்போது எனக்கு புரியவில்லை.  ஓராண்டுக்குப்பிறகுதான் நான் அதை புரிந்துகொண்டேன்.  நான் தமிழகத்தில் இப்போது எங்கு போனாலும் என்னை தல என்று தான்  எல்லோரும் கூப்பிடுறாங்க. . நானும் அவர்களின் அன்பை புரிந்து கொண்டேன். வித்தியாசமான உணர்வு. யாராவது எங்கு என்னை தல என அழைத்தாலும் தென்னகத்தில் இருப்பவர் தான், சி எஸ் கே வின் ரசிகர் என்பது தெரியும். அதேபோல், ரசிகர்கள் எனக்கு மட்டுமல்லாமல் மற்ற டீம் வீரர்களுக்கும் மிகுந்த ஊக்கம் அளிக்கின்றனர்” என தெரிவித்தார்.

கடைசி லீக் போட்டி முடிந்ததும் ரசிகர்களுக்கு ஜெர்சி, டி ஷர்ட் என அன்பளிப்பு கொடுத்து அசத்தினர் வீரர்கள். மேலும் ஊழியர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

எனினும் இன்றைய போட்டிகள் முடியும் பொழுது மீண்டும் சேப்பாக்கத்தில் தல என்ற கோஷத்தில் கொண்டாட மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரிந்துவிடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top