Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒத்த ஆளு நூறு பேருக்கு சமம் : அசால்ட்டா நிரூபித்த ’தல’ தோனி!

புதுடெல்லி: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், புனே அணியின் விக்கெட் கீப்பர் தோனி, ஐபிஎல் அரங்கில் 100 வது விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெல்லியில் நடக்கும் 55வது லீக் போட்டியில், புனே, டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

டெல்லி அணியில் கார்லோஸ் பிராத்வெயிட்டுக்கு பதிலாக நதீம் சேர்க்கப்பட்டார். இதே போல, புனே அணியில், சொந்த ஊருக்கு பறந்த இம்ரான் தாகிருக்கு பதிலாக, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா இடம் பிடித்தார்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின், ஸ்ரேயாஷ் ஐயர் (3) தோனி கையில் சிக்கினார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் 100வது விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமானார் தோனி. தவிர, ஐபிஎல் அரங்கில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் பட்டியலில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு (105 விக்கெட்) பின் தோனி இரண்டாவது இடம் பிடித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top