Sports | விளையாட்டு
ஐபிஎல் 2018: கேப்டன் கூல் செய்ய இருக்கும் சாதனை..
ஐபிஎல் தொடர்களில் கேப்டன் தோனி இன்று விளையாட இருக்கும் போட்டியில் கூலாக ஒரு சாதனையை செய்ய இருக்கிறார்.
ஐபிஎல் தொடர் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பிரபலமடைந்தது. 2008ல் இதன் முதல் சீசன் தொடங்கப்பட்டது. ராஜஸ்தான், சென்னை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இந்தியாவின் பிரபல நகரங்களின் பெயர்களில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து விளையாடி வருகின்றனர். இதில், கேப்டன்களாக பிரபல விளையாட்டு வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.
11வது சீசன் ஐபிஎல் தொடர் வரை ஒவ்வொரு அணிகளிலும் கேப்டன்கள் பலமுறை மாற்றப்பட்டனர். ஆனால், சென்னை அணிக்கு 2008 ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி மட்டுமே இன்று வரை இருக்கிறார். 2 வருடங்களுக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணியின் கிரேஸ் இன்னும் குறையவே இல்லை. வீரர்கள் ஏலத்தில் அதிக வயதுடையவர்கள் அதிகம் சென்னைக்கு எடுக்கப்பட்டதால் பல கேலிக்கு ஆளாகியது. இதை தவிடு பொடியாக்கும் விதமாக இன்று வரை பஞ்சாப் போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டியிலும் த்ரில் வெற்றியை பெற்று வருகிறது.
அதிலும், சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவார் என சர்ச்சைகள் எழுந்தது. பலர் விமர்சிக்க தொடங்கினர். இதற்கெல்லாம், நடப்பு தொடரில் தன் மட்டையால் பதில் சொல்லி வருகிறார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக வெற்றி பெற்றிருப்பவர் தோனி மட்டுமே. ஏன் இதில் போட்டிக்கு கூட ஆள் இல்லை.
இந்நிலையில், இன்று மும்பைக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியின் மூலம் மகேந்திர சிங் தோனி 150வது போட்டியில் விளையாட இருக்கும் முதல் கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்த இருக்கிறார். அதிலும், தடை காலத்தில் மட்டும் புனே அணிக்கு 14 போட்டிகளில் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இன்றைய போட்டிகள் ரசிகர்கள் செம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
