தேவர் மகன் படத்திற்கு பிறகு அந்த கெட்டப்பை பார்த்து லயித்து பல பேர் அந்த கெட்டப்பில் நடித்துள்ளனர். ஆனால் தற்போது அந்த கெட்டப்பில் நடிப்பவர் யார் தெரியுமா?அது வேற யாரும் இல்லைங்க நம்ம மொட்ட ராஜேந்திரன்தான். முதலில் வில்லனாக அறிமுகமாகி பிறகு நகைச்சுவை நடிகராக கலக்கி கொண்டிருக்கும் மொட்டை ராஜேந்திரன் ஒரு ராஜாவும் நாலு கூஜாவும் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் அவர்கள் தேவர் மகன் கமல் கெட்டப்பில் வந்து காமெடியில் அசத்தவிருக்கிறார்.

இந்த படம் பற்றி அவர் கூறுகையில் “இந்த படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு விக் வைத்துக்கொண்டு வருகிறேன், மேலும் கமல் அவர்கள் கெட்டப்பில் நான் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கெட்டப்பில் ஷூட்டிங்கில் அனைவரும் என்னை மரியாதையோடு பார்பதாக எண்ணுகிறேன்.

பலர் இந்த கெட்டப் குறித்து என்னை பாராட்டுகின்றனர். கமல் ரசிகர்கள் இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வர் என்று நம்பிகிறேன்.” இவ்வாறு கூறினார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: மகிழ்ச்சி