Tamil Cinema News | சினிமா செய்திகள்
வில்லன் நடிகர் தீனாவின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பல வில்லன் நடிகர்கள் இருக்கிறார்கள், பல வில்லன் நடிகர்கள் பல படத்தில் நடித்திருந்தாலும் பேரும் புகழும் கிடைப்பதில்லை, ஆனால் ஒரு சில வில்லன் நடிகர்கள் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுவார்கள்.
அந்தவகையில் வில்லன் நடிகர் தீனா முதன் முதலில் கமல் நடித்த விருமாண்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பிறகு விஜய்யின் தெறி படத்தில் வில்லனாக நடித்தார், இந்த ஒரு படத்திலேயே இவரின் பெயரும் புகழும் உயர்ந்து விட்டது.
தெறி படத்தில் இவர் பேசும் பஞ்ச் வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது, அதனை தொடர்ந்து திமிர்பிடித்தவன் படத்தில் இவர் மிக முக்கியமாக வில்லனாக நடித்திருந்தார் அது மட்டுமில்லாமல் தனுஷின் வடசென்னை திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது இந்த நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

dheena
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
