அஜித் தமிழ் திரைப்பட துறையில் முன்னணி நடிகர்,இவர் தனக்குன்னு ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் அதற்க்கு காரணம் இவரின் அயராத உழைப்பும் திறமை மட்டுமே காரணம்,இவரது ரசிகர்கள் இவரின் படத்திற்காக,டீசர் ,டிரைலர் அனைத்தையும் ஆவலுடன் எதிர்பார்ப்பவர்கள். அஜித்திற்கு திரை பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். முருகதாஸ் இயக்கிய படம் தீனா.

தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான்  ஏ. ஆர். முருகதாஸ் இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் இந்த படத்தில் வெற்றி பெற்றதன் மூலம் , ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.ARMurugadoss-64th-National-Award

முருகதாஸ் படம் என்றாலே திரையரங்குகளுக்கு நம்பி போகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ஸ்பைடர்.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தீனா படம் உருவாகிய விதம் குறித்து முருகதாஸ் மனம் திறந்துள்ளார்.

தீனா அஜீத் குமார் நடித்து 2001ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபி, லைலா போன்றோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்குநர் எஸ். ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணிபுரியும்பொழுதே நடிகர் அஜித் குமாரிடம் இப்படத்தில் லைலா மற்றும் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடிக்க சம்மதம் பெற்றார்.

இதில் இவர் கூறுகையில் ‘முதலில் தீனா படம் ஒரு மாஸ் படமாக இல்லாமல், கிளாஸ் படமாக தான் எடுக்க நினைத்தேன்.

அதில் கிளைமேக்ஸில் ஹீரோயின் இறப்பது போல தான் காட்சிகள் வைத்தேன், கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் வலி என்ற கான்செப்ட்டில் உருவாக்கினேன்.

ஒரு ரவுடி கத்தியால் குத்துப்பட்டு இறக்காமல் அவனை சுற்றி இருப்பவர்களோ, அவனுக்கு பிடித்தவர்களோ இறந்தால் எப்படியிருக்கும் அவன் மனது என்பதை தான் கதையாக உருவாக்கியிருந்தேன்.

ஆனால் எடுத்தது வேறு ஹீரோயின் உயிருடன் இருப்பது போலவும் பிழைத்து கொண்டது போலவும் கிளைமேக்ஸ் மாற்றி அமைத்தேன் இதற்க்கு காரணம் வர்த்தகத்திற்காகவும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும் அமைத்தேன்.

இதனால் தான் , ஒரு சில வர்த்தகத்திற்காக கதையை மாற்றி தீனாவை மாஸ் படமாக எடுத்தேன்’ என்று கூறியுள்ளார்.