fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தயாநிதி அழகிரி இயக்கியுள்ள மாஸ்க் குறும்படத்தின் கதை, மெஸேஜ் இது தானுங்க- ஹீரோ யார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தயாநிதி அழகிரி இயக்கியுள்ள மாஸ்க் குறும்படத்தின் கதை, மெஸேஜ் இது தானுங்க- ஹீரோ யார் தெரியுமா?

அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி தமிழ் சினிமாவிற்கு ஏற்கனவே பரிச்சயமானவர். கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனத்தின் வாயிலாக தமிழ்ப் படம், தூங்கா நகரம், மங்காத்தா போன்ற பல வெற்றி படங்களைத் தயாரித்தவர்.

சில வருடங்களாகவே தயாரிப்பிலிருந்து விலகியே இருந்த இவர் மாஸ்க் என்ற குறும்படத்தை அவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவருடைய சகோதரரும் நடிகருமான அருள்நிதி மற்றும் நடிகர் சூரி வெளியிட்டுள்ளார்கள். இந்த மாஸ்க்குக்கு உள்ளே என்ன மாஸான விஷயம் மறைஞ்சு இருக்குன்னு வாங்க பார்ப்போம்.

சமூக ஊடகங்கள் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதில் பிளஸ் மற்றும் மைனஸ் இரண்டுமே உள்ளது. பல சமயங்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உதவியதை நாம் அறிவோம். ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கவும், வதந்திகளைப் பரப்பவும் இதனை பயன்படுத்துபவர்களும் உண்டு. அப்படி பட்ட ஒருவனைப் பற்றிய கதை தான் ‘மாஸ்க்’.

தான் பிரபலமடைவதற்காக ட்விட்டர் மூலம் எதிர்மறையான விஷயங்களையும், பல்வேறு நடப்பு நிகழ்வுகள் குறித்து விமர்சித்தும் செய்திகளைப் பதிவிடுகின்றான். இந்த செயலால் அவன் கண்காணிக்கப்பட்டு இறுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான். அவன், தான் செய்யும் செயல்களை உணர்கிறானா ? அவனது வாழ்க்கைப் பயணத்தில் அவனுக்கு யார் உதவுகிறார்கள் ? அவனது எதிர்காலம் என்ன ? போன்றவற்றை ‘மாஸ்க்’ குறும்படம் கூறுமாம்.

இப்படத்தில் மகத், லல்லு, பாஷா மற்றும் அலெக்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்களாம். ஹீரோ யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். (இயக்குனர் + நடிகர் கவுரவ் ஆக இருக்கும் என்கின்றனர். பெரியார் குத்து புகழ் ரமேஷ் தமிழ்மணி இசை அமைக்கிறார். நட்பே துணை பட புகழ் பென்னி ஆலிவர் எடிட்டிங் செய்துள்ளாராம்.

சென்னை மற்றும் மதுரையில் ஷூட் செய்யப்பட்டுள்ளது. முருகதாஸ், சுந்தர் சி, அட்லீ போன்ற இயக்குனர்களிடம் அஸீஸிடண்ட் ஆக இருந்த சிலர் இப்படத்தில் தயாநிதி அழகிரியுடன் இணைந்து ஒர்க் செய்கிறார்களாம்.

லாக் டவுன் சமயத்தில் ட்விட்டரில் பார்த்த பொழுது பாசிட்டிவ் விஷயங்கள் பெரிதாக ட்விட்டரில் இல்லை. கோரனாவகட்டும், சுஷாந்தின் மரணமாகட்டும் எங்கும் நெகட்டிவிட்டி மற்றும் வெறுப்பே காணப்பட்டதை கவனித்துள்ளார். அதுவே இப்படத்தை ரெடி செய்ய இயக்குனருக்கு உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top