விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ கடந்த வாரம் வெளியாகி முதல் நாளில் நல்ல வசூல் பெற்றது என்பதையும் இந்த படம்தான் விஜய்சேதுபதியின் பெஸ்ட் ஒப்பனிங் படம் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் நேற்றுடன் முடிந்த முதல் வாரத்தில் இந்த படம் ரூ.10 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாகவும் இதில் சென்னையில் மட்டுமே சுமார் ரூ.2 கோடி வசூலாகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதியை கண்டு பயந்துப்போன ரித்திகா சிங்- எதற்காக?

இந்த படத்தின் தமிழக உரிமையை தயாரிப்பாளர் ரூ.6.88 கோடிக்கு மட்டுமே விற்பனை செய்துள்ள நிலையில் ஒரே வாரத்தில் இந்த படம் ரூ.3 கோடிக்கும் அதிகமான லாபத்தை கொடுத்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகிஸ்தர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.அப்படி பார்த்தால் படம் கண்டிப்பாக ஹிட் வரிசையில் இடம் பிடித்துவிட்டது.