vijaysethupathi-dharma duraiசீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் தர்மதுரை படத்தின் டீசர் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

ஸ்டுடியோ 9 சார்பாக சுரேஷ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது இதில் விஜய் சேதுபதி, தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.