Tamil Cinema News | சினிமா செய்திகள்
கைதி படம் பார்த்தேன்.. சிறப்பாக இருந்து.. அசுரன் விழாவில் தனுஷ் பாராட்டு
சென்னை : கைதி படம் சிறப்பாக இருந்தாக அசுரன் படத்தின் 100வது நாள் விழாவில் தனுஷ் பாராட்டினார்.
2019 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்கள் மனதை வென்ற படங்களில் முக்கியமானது அசுரன். சிறந்த திரைக்கதையை கொண்ட அசுரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல் என்று சொல்லலாம்.
அப்படி செதுக்கி இருப்பார் வெற்றி மாறன், செதுக்கியதற்கு பலனும் தெரிந்தது. தனுஷ் நடிப்பில் இதுபோன்ற வெற்றி படம் இதுவரை சரித்திரத்தில் இருந்தது இல்லை என்பதே நிஜம்.
அசுரன் படத்தின் 100வது நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகர் தனுஷ் பேசுகையில், அசுரன் படம் நடித்து முடித்து நான் அடுத்த படத்தின் ஷூட்டிங்காக லண்டன் சென்றேன். இப்படத்தின் வெற்றியை என் அம்மா முதன் முதலில் எனக்கு சொன்னாங்க, நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன்.
கடந்த வருடத்தின் இன்னொரு வெற்றி படம் கைதி. இப்படத்தை பாராட்டியுள்ளார் தனுஷ். “கைதி படத்தை நான் பார்தேன் நன்றாக இருந்தது அந்த படத்தில் கார்த்திக் நடிப்பு ரசிக்கும் படி இருந்ததது. இந்த ஆண்டு அவருக்கு நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன் என்றார்.
