Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் பார்த்ததை இந்த உலகமும் பார்க்கட்டும்.. வைரலாகுது தனுஷின் லேட்டஸ்ட் ட்வீட்
இன்று நடிகராக தமிழ் சினிமாவில் கொடி நாட்டியுள்ளவர் தனுஷ். கோலிவுட் என்ற எல்லையை கடந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று விட்டார் மனிதர். இவரின் சினிமா வாழ்க்கைக்கு தொடக்கப்புள்ளி வைத்தது அண்ணன் செல்வராகவன் தான். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்கள் இன்று பார்த்தல் கூட சிறப்பானதாகவே தோன்றும் நமக்கு.
நேற்று கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் செல்வராகவன் என்ற அறிவிப்பு வெளியானது.
சாணிக் காயிதம் – இப்படத்தை ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். வசந்த் ரவியின் இரண்டாவது படமான “ராக்கி” படத்தை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவை யாமினி, ராமு தங்கராஜ் ஆர்ட் பணிகளை கவனிக்கிறார்கள்.

dhanush about selvaraghavans acting debut
இப்படத்தின் போஸ்டரை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார் தனுஷ். மேலும் நான் பார்த்த உங்களின் நடிப்பு திறமையை இந்த உலகமும் பார்க்கட்டும் என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
