fbpx
Connect with us

Cinemapettai

தனுஷ் தயாரிப்பில் ‘அம்மா கணக்கு’

News | செய்திகள்

தனுஷ் தயாரிப்பில் ‘அம்மா கணக்கு’

Dhanush-Next Movie Production-Amma Kanakkuதனுஷின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்திற்கு அம்மா கணக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பெண் இயக்குனரான அஸ்வினி ஐயர் இயக்குகிறார். இந்தப் படத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரக் கனி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

அஸ்வினி ஐயர், ஹிந்தியில் இயக்கியுள்ள நில் பட்டே சன்னாட்டா என்ற படம்தான் தமிழில் அம்மா கணக்கு என்ற பெயரில் தயாராக உள்ளது. பிரபல ஹிந்தித் திரைப்பட இயக்குனர் நிதேஷ் திவாரியின் மனைவிதான் அஸ்வினி ஐயர். அம்மா, மகள் இருவருக்குமிடையேயான பாசப் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை.

80களில் யதார்த்த நாயகியாக வலம் வந்த ரேவதி இந்தப் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய மகளாக அமலா பால் நடிக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் அப்பாவாக நடித்து நல்ல பெயரை வாங்கிய சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top