fbpx
Connect with us

Cinemapettai

கடந்த 10 வருடத்தில்.. வைரலாகுது தனுஷின் ஆத்மார்த்தமான பதிவு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடந்த 10 வருடத்தில்.. வைரலாகுது தனுஷின் ஆத்மார்த்தமான பதிவு

தனுஷ் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன்முகக்கலைஞசனாக வளம் வருபவர்.எனை நோக்கி பாயும் தோட்டா, அசுரன் என அடுத்தடுத்து ரிலீஸ் ஆனது. அதுமட்டுமன்றி பட்டாஸ், ராம்குமார் படம், மாரி செல்வராஜின் அடுத்தது, கார்த்திக் சுப்புராஜ் படம், தனுஷே இயக்கும் படம் என லிஸ்ட் நீண்டுக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் புத்தாண்டு வாழ்த்துக்களுடன், என் ஆழ்மனதில் இருந்து என ஒரு கடிதத்தை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

“அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும். இந்த 10 ஆண்டுகள் எனக்கு சூப்பர் ஸ்பெஷல். என்னை ஊக்குவித்த, ஆதரித்த மற்றும் எனது பயணத்தின் மிக முக்கியமான பகுதியாக இருந்ததற்கு நான் உங்களுக்கு போதுமான நன்றிகளை சொல்ல முடியாது.

நான் சவால்களையும், தடைகளையும் புன்னகையுடன் எதிர்கொண்டேன்… எனது பலம் என் ரசிகர்கள்.

தேசிய விருதுடன் தொடங்கிய 2000 த்தில் நான் இயக்குனராக அறிமுகமாகி, அசுரனுடன் முடிந்தது. பல படங்கள் எனக்கும், உங்களுக்கும் இதயத்துடன் நெருக்கமாக அமைந்தது. ஒரு நடிகராக இதைவிட சிறந்த 10 வருடங்களை நான் பெற்றிருக்க முடியாது.

உங்களை பெருமைப்படுத்த நான் எப்போதும் கடினமாகவும், மிகக் கடினமாகவும் உழைப்பேன்.

ஓம் நமசிவாய, கடவுள் ஆசீர்வதிப்பார், அன்புடன் தனுஷ்” என பதிவிட்டுள்ளார்.

Dhanush’s letter

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top