Tamil Cinema News | சினிமா செய்திகள்
டா வின்சி ஓவியத்தை தழுவி வெளியான D 40 மோஷன் போஸ்டர்- இது என்னப்பபா கர்த்தருக்கு வந்த சோதனை

D 40 – கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம். தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி. மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ (கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் லார்ட் கமாண்டர் ஜியோர் மோர்மோன்ட் ரோலில் நடித்து அசத்தியவர்) கலையரசன், ஜுஜு ஜார்ஜ், அஸ்வத் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.
ஆக்ஷன் திரில்லர் ஜானர் ஆன இப்படத்திற்கு “ஜகமே தந்திரம்” என டைட்டில் வைத்துள்ளனர். படமும் மே 1 ரிலீசாகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Jagame Thanthiram
இந்நிலையில் இப்போஸ்டரில் வரும் இந்த ஒரு காட்சி நமக்கு வேற விஷயத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. லியோனார்டோ டா வின்ஸி வரைந்த THE LAST SUPPER ஐ மையப்படுத்தியே ரெடியாகி உள்ளது.
the last supper
படத்தின் லாஜிக் படி இந்த பிரம்மில் உள்ள ஒருவர் தான் தனுஷிற்கு எதிராக இருப்பார். இந்த போஸ்டருக்கு என்ன எதிர்ப்பு கிளம்ப போடுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.