வழக்கமாக அஜித், விஜய்யின் வெற்றி படங்களை சில திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படுவது வழக்கம். அவர்களின் பிறந்த நாள்களில் பல திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதேபோல் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சினிமாவில் நுழைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது, எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறி டுவிட் செய்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் தனுஷின் 15 வருட பயணத்தை கொண்டாட வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வேலையில்லா பட்டதாரி படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

இந்த தகவல் அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது