fbpx
Connect with us

Cinemapettai

மாரியப்பனாக தனுஷ்.! தனுஷ், ஐஸ்வர்யா செய்த கவுரவம்!

dhanush as mariappan

News | செய்திகள்

மாரியப்பனாக தனுஷ்.! தனுஷ், ஐஸ்வர்யா செய்த கவுரவம்!

உடல் ஊனமுற்றவர்களுக்கான பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த மாரியப்பன், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் ஏழை ஏளிய குடும்பத்திலிருந்து போராடி முன்னுக்கு வந்தவர் என்பதும் நம்பிக்கை அளிக்கும் செய்தி. இந்திய அரசும், தமிழக அரசும் அவரை முறையாக கவுரவித்தன. சினிமாக்காரர்களில் முக்கியமான பலரும் மாரியப்பனுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். முக்கியமாக நடிகர் விஜய் தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

வாழ்த்துக்களை தாண்டிய கவுரவம் இன்னொன்றும் இருக்கிறது. அதுதான் சினிமா. ஒருவரது புகழ் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அவரை சினிமாவாக காட்டிவிடுவதை விட சிறந்த முறை வேறு எதுவும் இருக்கப் போவதில்லை. அந்த வகையில் மாரியப்பன் கதையை படமாக எடுக்கப் போகிறார் ஐஸ்வர்யா தனுஷ். இந்தப்படத்திற்கு மாரியப்பன் என்றே பெயர் வைக்க திட்டமிட்டிருக்கிறார் அவர்

இந்தப்படத்தை ஐஸ்வர்யா தனுஷே இயக்குவார் என்பது தெரிந்த விஷயம். தெரியாத விஷயம்? அந்த மாரியப்பனாக நடிக்கப் போவதே நம்ம தனுஷ்தான்!

மாரியப்பனுக்கு மட்டுமல்ல, தமிழ்சினிமாவுக்கே கவுரவம் சேர்க்கப் போகிறார் தனுஷ்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top