இளையதளபதி விஜய் பிறந்தநாளை 22ம் தேதி ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கின்றனர்.

இதற்காக ஒரு மாதமாக சமூகவலைதளங்களில் பல ஹேஷ்டேக்குகளை டிரெண்டாகி தெறிக்க விட்டு வருகின்றனர்.

தற்போதும் ADV VIJAY BDAY T61 FL PARTY என்ற டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 21ம் தேதியான இன்று நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் லிங்கா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் போட்டிருந்தார்.

இதற்கு முன்னதாக நடிகர் விஜய்க்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் போட்டுள்ளார். கடும் உழைப்பாளி, அர்ப்பணிப்பு நிறைந்த அற்புதமான மனிதர். அவரை பார்த்து அதிகம் கவர்ந்துள்ளேன். நன்றி சார். என்று பதிவிட்டுள்ளார்.

ஒருநாள் முன்னதாகவே வாழ்த்து தெரிவித்துள்ள இவர் அட்வான்ஸ் என்றும் குறிப்பிடாததால் ரசிகர்கள் கமெண்டில் நாளைக்கு தான் பிறந்தநாள், அவசரப்பட்டியே குமாரு என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here