மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். கதிரேஷன்-மீனாட்சி தம்பதியினர் தனுஷ் தன்னுடைய மகன்தான் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில், தங்களுக்கு 3வது மகனாக பிறந்த தனுஷ், 11ம் வகுப்பு படிக்கும்போதே சென்னைக்கு ஓடி விட்டதாகவும், பல இடங்களில் தேடியும் கிடைக்கில்லை. பின்னர், சினிமாவில் நடிப்பதாக கேள்விப்பட்டு அவரை பார்க்க முயற்சித்தும் முடியவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது உடல்நிலை சரியில்லாததால் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வருவதாகவும், மாதாமாதம் ரூ.65 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. கதிரேஷன் – மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரிய இந்த வழக்கை, இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பிப்ரவரி 28ம் தேதி நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.