செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தனுஷ்.. உதவிக் கரம் நீட்டிய சூப்பர் ஸ்டார்.. அதுக்குனு ஒரு மனசு வேணும்ல

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு சூப்பர் ஸ்டார் உதவி செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.

தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தனுஷின் 51 வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது.

இப்படம் நேரடி தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படத்தில் இதுவரை நடித்திராத கேரக்டரில் தனுஷ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் லுக்போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் இண்ட்ரோ போஸ்டர்களும் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இப்படத்தின் ஷூட்டிங் திருப்பதி, தாய்லாந்து, மும்பை ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

பாடல் காட்சிகள், ஆக்சன் காட்சிகளுக்காக படக்குழு வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தின் 80 சதவீத ஷூட்டிங் முடிந்த நிலையில், இன்னும் இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

தனுஷுக்கு உதவும் சூப்பர் ஸ்டார்

இந்த நிலையில், குபேரா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நாளை வெளியிடுகிறார். இதுகுறித்து படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது.

தெலுங்கில் விஜய்,சூர்யா, கார்த்திக்கு நல்ல மார்க்கெட் இருக்கும் நிலையில், இப்படம் நேரடியாக தெலுங்கிலும் தயாராகி வருவதால் இப்படத்தின் பிசினஸுக்காகவும், பரவலான ரசிகர்களை ரீச் செய்யும் நோக்கத்திலும் சூப்பர் ஸ்டாரை குபேரா படக்குழு அணுகி இந்த வீடியோவை வெளியிடும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபும் தனுஷ் தமிழ் சினிமா ஹீரோவாக இருந்தாலும் குபேரா கிளிம்ஸ் வீடியோவை வெளியிட சம்மதித்துள்ளார். இதற்கும் ஒரு மனசு வேண்டும் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

தெலுங்கில் சக நடிகர்கள் முன்னணியில் இருந்தாலும் ஈகோ பார்க்கலாமல் மற்ற நடிகர்களுக்கு உதவும் போக்கு தமிழ் சினிமாவில் பரவ வேண்டும் என ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் கூறி வருகின்றனர். எனவே ஆளே அடையாளம் தெரியாதபடி வித்தியாசமான கெட்டப்பில் உடலை வருத்தி தனுஷ் நடித்துள்ள குபேரா பட கிளிம்ஸ் வீடியோ அனைவரையும் கவரும் வகையில் வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.


makesh babu

- Advertisement -

Trending News