ரஜினி அவரது ரசிகர்களை கடந்த சில நாட்களுக்கு முன் தனக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார்.அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டமே இந்நிகழ்ச்சியென ரஜினியின் ரசிகர்கள் கூறினார். அதே போல் அவர் பேச்சும் அரசியல் வருகை குறித்தே இருந்தது.

இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறிவரும் நிலையில், ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷ் எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை.

அதிகம் படித்தவை:  "ரஜினி அரசியலுக்கு தகுதி உடையவரா ?" அலசி ஆராயும் கரு.பழனியப்பன். வீடியோ உள்ளே !

இந்த நிலையில் ஒருநிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுசிடம் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு தனுஷ் அளித்த பதில் “அரசியல் குறித்து மட்டுமல்ல, ரஜினி எது பற்றி முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்களால் எங்கள் குடும்பத்துக்கு எந்தவித அழுத்தமும் இல்லை” என அவர் கூறினார்.

அதிகம் படித்தவை:  PETA அமைப்பிற்கு ஹிப் ஹாப் ஆதி பதிலடி

மேலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருடைய கட்சியில் உங்களுக்கு என்ன பதவி கிடைக்கும் என்று கேட்ட போது தனுஷ் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே சென்றார்.