dhanush vip2

தனுஷ் நடிப்புல சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்துல வெளிவரப்போகிற படம் VIP 2. இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரை இடப்படுறதா இருக்குங்க.

படத்தின் வெளியீடு தள்ளிப்போகும்னு வந்த புரளியை நம்ப வேண்டாம் என்று தனுஷ் தனது ரசிகர்களிடம் வேண்டிக்கொண்டுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் தினம் தினம் தனது ட்விட்டர் பக்கத்துல படத்தோட கவுண்ட் டவுன் கொடுத்துட்டு இருக்காரு. 7 நாள்தான் இருக்கு, 6 நாள்தான் இருக்கு இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ட்வீட் போடுறாரு.

சும்மா போடலை ஒவ்வொரு நாளும் படத்தின் ஒரு போஸ்டரையும் சேர்த்து போட்டுட்டு இருக்காரு. நேற்று தன்னுடைய ட்விட்ல நடிகை காஜோல்க்கு பிறந்த நாள் வாழ்த்துது சொன்னாரு தனுஷ்.

அதிகம் படித்தவை:  ரஜினிக்கு பிறகு தனுஷ் - மனோ பாலாவின் வாழ்த்து

dhanush vip2இப்போ மலேசியாவில் 550 திரையரங்குகளில் தன்னுடைய படம் VIP 2 ரிலீஸ் ஆகிறது என்று அந்த திரையரங்குகளின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார் தனுஷ்.

தனுஷோட தினசரி VIP 2 ட்வீட்களை பார்த்து உன் அலம்பல் தாங்க முடியலைப்பா என்று கிண்டலாக சொல்லி இருக்காரு நகைச்சுவை நடிகர் விவேக். VIP முதல் பாகத்தில் காமெடி கதாபாத்திரத்தில் விவேக் நடித்தது அனைவரும் அறிந்ததே.

மேலும் அவர் தனுஷ், சௌந்தர்யா, மற்றும் சூப்பர் ஸ்டார் மூவரையும் கடின உழைப்பும் அர்பணிப்பும் உடையவர்கள் என்று பாராட்டியுள்ளார்.
இதற்கு நடிகர் தனுஷ் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்..

அதிகம் படித்தவை:  தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் அதர்வா...என்ன சொன்னார் ரஜினி?

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இவனுக மொகறையெல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவனுக மாதிரி தெரியலையே.