தனுஷ், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய அஜீத்திடம் மீண்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் தொடரி. ரயிலிலேயே எடுத்து வித்தியாசமாக காட்ட முயன்று தோற்ற படம்.

ரயிலிலேயே டான்ஸ் வருது, ஃபைட் வருது எனக்கு வாயில் நல்லா வருது என்று படத்தை பார்த்த ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர்.நெட்டிசன்களும் ஓட்டி தள்ளினார்கள்.

சத்ரியன்,தொடரியை அடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சத்ரியன் படமும் ஓடவில்லை. இந்த இரண்டு படங்களை தயாரித்து நஷ்டத்தில் உள்ளது சத்யஜோதி பிலிம்ஸ்.