fbpx
Connect with us

Cinemapettai

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் நான்கு முறை கைவிடப்பட்ட திரைப்படம்.. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் நான்கு முறை கைவிடப்பட்ட திரைப்படம்.. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த போஸ்டர்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் வரவேற்பு அவர்களது படங்களுக்கு நிச்சயம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் கிடைத்துள்ளன.

சமீபத்தில் வெளியான அசுரன் படம் வியாபார ரீதியாக 100 கோடியைக் கொடுத்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருந்தது. அந்த படத்தை தனுஷின் தங்கை டாக்டர் ஆர் கீதா என்பவர் தயாரிக்க இருந்தார்.

அந்த படத்திற்கு தேசிய நெடுஞ்சாலை எனவும் பெயர் வைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியது.

வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருந்த அந்த படம் பல்வேறு விதமான பொருளாதார சிக்கலில் சிக்கி கடைசிவரை தனுஷ் நடிப்பில் உருவாகாமல் போனது.

அதுமட்டுமில்லாமல் நான்கு முறை இந்த படம் ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்டதால் செண்டிமெண்டாக இந்த படம் நமக்கு ஒர்க் அவுட் ஆகாது என கைவிட்டு விட்டதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.

dhanush-vetrimaran-dropped movie

dhanush-vetrimaran-dropped movie

பின்னர் 2013ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் உதயம் nh4 எனும் பெயரில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top