Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையதளத்தில் வைரலாகும் தனுஷின் வடசென்னை படத்தின் கதை.!

விசாரணை என்ற படம் 2015ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படமாகும். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 63 வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ்ஷை வைத்து மிக பிரமாண்டமாக வடசென்னை என்ற படத்தை இயக்கி வருகிறார் வடசென்னை படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் மேலும் இப்பொழுது முதல் பாகம் 90% படபிடிப்பு முடிந்து விட்டது என அறிவித்துள்ளார்கள்.
மேலும் வடசென்னை படத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஸ் என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.தற்பொழுது வடசென்னை படத்தின் மையக்கதை தெரியவந்துள்ளது.
அதாவது வடசென்னை படம்மானது சென்னையில் உள்ள மீன் பிடிக்கும் தொழிலாளிகள், மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வேலைப்பார்க்கும் மக்கள், அவர்களை சுற்றி நடக்கும் அரசியல் பற்றிய நிகழ்வுகள் தான் கதை என தெரியவந்துள்ளது.
