vadachennai

வட சென்னை

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படம் “வட சென்னை”.கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் .

Dhanush

இப்படத்தை தனுஷ் தன் வண்டர் பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு . வெங்கடேஷ் எடிட்டிங்.

vada chennai

வட சென்னை – பார்ட் 1

முதல் பகுதி 1980களில் நடப்பது போன்ற கதைக்களமாம். அந்த பார்ட் 1 ஷூட்டிங் முடிவடைந்ததாம். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இனி போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் தான் .

vada chennai part 1

இந்நிலையில் நேற்று இப்படத்தின் முதல் விளம்பர அறிக்கை வரும் மார்ச் 8 அன்று என டீவீட்டுயுள்ளார்.

தனுசுடன் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர்,சுப்ரமண்யம் சிவா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல  பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சினிமாபேட்டை கிசு கிசு

ட்விட்டரில் முதல் லுக் போஸ்டர், யூ டியூப்பில் மோஷன் போஸ்டர் என்று படங்கள் பற்றிய அப்டேட் வெளியிடும் இன்றைய சூழலில், தனுஷ் தமிழில் விளம்பர அறிக்கை என ட்வீட் செய்துள்ளது பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஒரு வேலை பார்ட் 1 80களில் நடப்பது போன்ற கதைக்களம் என்பதால் செய்தித்தாளில் படத்தின் போஸ்டரை ரிலீஸ் செய்வாரோ என்று பேச்சு அடிபடுகிறது.

Vada Chennai

எது எப்படியோ வித்யாசமாக எதாவது செய்து அசத்துவார் தனுஷ் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. காத்திருப்போம் இன்னும் சில தினங்கள்.