Videos | வீடியோக்கள்
பணம் எப்படி வேணா சம்பாதிக்கலாம், படிப்பு தான் மரியாதைய சம்பாதிச்சு தரும்.. புளிப்பான தனுஷின் வாத்தி ட்ரெய்லர்
இப்படி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய வாத்தி திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.
கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவந்தது. ஆனால் அதில் திருச்சிற்றம்பலம் படத்தைத் தவிர மற்ற படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. அதைத்தொடர்ந்து அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் சில தாமதத்தினால் வரும் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வெங்கி அட்லுரி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் தனுசுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் போர்ட்யூன் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தமிழகத்தில் வெளியிடுகின்றனர்.
Also read: ஐஸ்வர்யாவுடன் ஒர்க் அவுட் செய்யும் நயன்தாராவின் எக்ஸ் காதலன்.. கொலவெறியில் தனுஷ்
ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருந்தது. அதிலும் அதில் இடம் பெற்றிருந்த வா வாத்தி என்ற மெலோடி பாடல் இப்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தனுஷ் இந்த படத்தில் வாத்தியாராக நடித்திருப்பதும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்திருந்தது.
மேலும் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனாலேயே இப்படத்தை ரசிகர்களிடம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் படக்குழு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வந்தது.
Also read: அங்க போறீங்களா என வெற்றிமாறனுடன் மல்லு கட்டிய தனுஷ்.. வேறு வழி இல்லாமல் தொடங்கும் 2-ம் பாகம்
இப்படி மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டியிருந்த இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே தனுஷ் ரசிகர்கள் இன்று காலையிலிருந்தே சோசியல் மீடியாவை ரணகளப்படுத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் வாத்தி ட்ரெய்லர் என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி அதை ட்ரெண்ட் செய்தும் வந்தனர்.
இப்படி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய வாத்தி திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் இதை படு வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். மேலும் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே அதிக பார்வையாளர்களையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
