
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று தனுஷ் சினிமா கேரியரில் ஒரு மைல்கல் படமாக அமைந்துவிட்டது.
அசுரன் படத்தை தொடர்ந்து கர்ணன் படத்திற்கும் தனுஷுக்கு தேசிய விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது போன்ற செய்திகள் தான் தொடர்ந்து இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்கள், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு படம் என வரிசைகட்டி நிற்கின்றன.
இதற்கிடையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ராம்குமாருக்கு அப்பவே ஒரு பட வாய்ப்பை தனுஷ் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று வருடமாக கதை எழுதி வரும் ராம்குமார் இன்னும் படத்தின் முழு வேலைகளையும் முடிக்காமல் இழுத்துக் கொண்டே இருக்கிறாராம். இதனால் கடுப்பான தனுஷ் ராட்சஷன் இயக்குனர் ராம்குமார் கொடுத்த கால்சீட்டை அப்படியே தூக்கி பாலாஜி மோகனுக்கு கொடுத்து விட்டாராம்.
வால் நட்சத்திரம் என்ற பெயரில் உருவாகி வந்த அந்த திரைப்படம் ஃபேன்டஸி கலந்த படமாக உருவாகும் என அப்போதே செய்திகள் வெளிவந்தன. அவரும் திறமையான இயக்குனர் என்பதால் லேட் ஆனாலும் படம் லேட்டஸ்டாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தனுஷ் அழைத்தால் கூட அவருக்கு ரிப்ளை செய்வதில்லை என்பதே ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.
