Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்த 3 வருடத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் 9 படங்கள் இவை தான்.. ஒவ்வொரு கூட்டணியும் தரமா இருக்கு!

அடுத்த மூன்று வருடத்திற்கு பிஸியாக உள்ள நடிகர் என்றால் அது தனுஷ் தான். வருடத்திற்கு 3 படமாவது நடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அந்த வகையில் இந்த வருடம் கர்ணன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. கர்ணன் படத்தை விட தனுஷ் ரசிகர்கள் அதிகம் தியேட்டரில் எதிர்பார்த்தது ஜகமே தந்திரம் படத்தை தான்.

ஆனால் தயாரிப்பாளர் செய்த குளறுபடியால் தற்போது அந்த படம் நேரடி ஓடிடி ரிலீசாக உள்ளது. இது ஒருபுறமிருக்க அடுத்த மூன்று வருடத்திற்கு தனுஷின் கால்ஷீட் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் D43 என்ற படமும் உருவாக உள்ளது.

அதற்கு காரணம் தனுஷ் தற்போது ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற இரண்டு படங்களிலும் தொடர்ந்து நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் நானே வருவேன் படப்பிடிப்பின் போது கூடவே முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். பிறகு ஆயிரத்தில் ஒருவன் 2 முடிந்தவுடன் தன்னுடைய 47 வது படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் தனுஷ். அந்த படத்தை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க உள்ளாராம்.

அதற்கடுத்ததாக வெற்றி மாறனுடன் ஒரு படம், மாரி செல்வராஜ் உடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாகி வருகிறார் தனுஷ். இது தவிர ஹிந்தி சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் நிறுவனத்திற்கு ஒரு படமும் நடிக்க உள்ளாராம்.

dhanush-cinemapettai

dhanush-cinemapettai

Continue Reading
To Top