இட்லி கடைக்காக 2 படங்களை ஐந்து முறை பார்த்த தனுஷ்.. அடுத்த ஹிட்டை பார்சல் பண்ணும் ராயன்

முதல் முதலாக டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் ஆகாஷ் பாஸ்கர். அவர் தனது முதல் படத்தை தனுஷ் தான் இயக்கி நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அதன் காரணமாகவே அந்த நிறுவனத்திற்காக தற்போது தனுஷ் இட்லி கடைதிரைப்படத்தை இயக்கி நடிக்கிறார்.

தனது 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்தார் தனுஷ். 50 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை படைத்தது இந்த படம். ராயன் படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ். இந்த படம் கொடுத்த தெம்பால் இன்னும் இரண்டு படங்கள் தனுஷை வைத்து தயாரிக்க இருக்கிறது சன் பிக்சர்ஸ்

இட்லி கடை படத்தின் சூட்டிங் தேனியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளிவந்த 2 படங்களில் வரும் மாதிரியே காட்சிகள் இந்த படத்திலும் இருக்க வேண்டும் என தனுஷ் விடாப்பிடியாய் இருக்கிறார். அதற்காக அந்த இரண்டு படங்களையும் ஐந்து முறை பார்த்து அதில் இருந்து ரெபரன்ஸ் எடுத்துள்ளார்.

அடுத்த ஹிட்டை பார்சல் பண்ணும் ராயன்

தனுஷ் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் யாரடி நீ மோகினி மற்றும் திருச்சிற்றம்பலம் இந்த இரண்டு படங்களும் அவருக்கு மாஸ் ஹிட்டானது. இரண்டுமே , ஆக்சன் சென்டிமென்ட் கலந்த பீல் குட் மூவியாக இருந்தது.

தற்போது இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்திலும் குடும்பம், சென்டிமென்ட், ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளும் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். எல்லா சென்டர்களிலும் ஓடக்கூடியதாகவும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் கூறுகிறார்.

- Advertisement -spot_img

Trending News