அஜித்,விஜய் இருவரும் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருக்கிறார்கள், இவர்கள் இருவரும் அவர்கள் சாதனையை அவர்களே முறியடிப்பார்கள், இப்படி இருக்க அஜித் விஜய் படத்திற்கு கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லையாம் ஆனால் தனுஷ் படத்திற்கு நடந்ததாம்.

thala-ajith
thala-ajith

ஆம் தனுஷ் நடித்த திருடாதிருடி திரைப்படம் 2003 ள் வெளிவந்தது இந்த படத்தை சுப்பிரமணியம் சிவாதான் இயக்கினார் படத்தில் தனுஷ்வுடன். கருணாஸ், சாயா சிங். மாணிக் விநாயகம் என பலர் நடித்தார்கள் இந்த படத்தில் உள்ள மன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் கேட்டது அந்த அளவிற்கு ரசிகரை கவர்ந்தது.

திருடா திருடி முதலில் ரிலீஸ் செய்த போது குறைந்த தொகைக்கு தான் விலை போனது பின்பு படம் பிக்கப் ஆனதும் ஒரு ஏரியாவில் படத்தை வாங்க கடும் போட்டி நிலவியது அதனால் படத்தை ஏலத்தில் விட்டார்கள், ஆனால் அப்பொழுதே ஏலத்தில் 1 கோடிக்கு விலை போனதாம் அப்பொழுது அவ்வளவு விலைபோனது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியதாம்.