அண்ணனுக்கு டாட்டா.. பழைய ஹிட் இயக்குனருடன் அவசர கூட்டணி போட்ட தனுஷ்

தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து நெட்ப்ளிக்ஸ் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் த கிரே மேன் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள இன்னும் பெயரிடப்படாத D43 எனும் படத்தில் நடிக்க உள்ளார்.

அதற்கடுத்ததாக தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் பஸ்ட் லுக் போஸ்டருடன் நிறுத்தப்பட்டுள்ள நானே வருவேன் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

ஆனால் தற்போது செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் சாணிக் காகிதம் படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிக் கொண்டே செல்வதால் திட்டமிட்டபடி தனுஷ் படத்தை தொடங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த தனுஷ் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தப்படி மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் D44 என்ற படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளாராம். மித்ரன் ஜவஹர் ஏற்கனவே தனுஷை வைத்து யாரடி நீ மோகினி உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் அறிவிப்பு வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட முக்கியமாக தனுஷ் மற்றும் அனிருத் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு இந்த படத்தில் மீண்டும் இணைகின்றனர்.

D44-cinemapettai
D44-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்