Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம்.! ஜல்லிக்கட்டுக்கு நடிகர் தனுஷ் ஆதரவு..
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, சூரி ஆகியோர் ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்படுவது இல்லை என்றும், ஏறு தழுவுதல் என்ற பெயரில் தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வரும் இந்த போட்டிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார்கள்.
நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம் மற்றும் அவர்களுடைய ஒருங்கிணைந்த குரல். ஜல்லிக்கட்டை ஆதரிப்போம், ஜல்லிக்கட்டு தேவையானது என்று கூறியுள்ளார்.
#Jallikattu is an integral element of the voice and identity of Tamilians. #ISupportJallikattu #WeNeedJallikattu #TamilCulture
— Dhanush (@dhanushkraja) January 10, 2017
நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், “நாட்டு மாட்டுக்காக குரல் கொடுக்காதவன் வீரன் அல்ல. விவசாயிக்காக குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல. மரத்தை மறந்தவன் மனிதனே அல்ல. இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது. ஆனாலும் மஞ்சள், கரும்பு, பானை வாங்கி விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
நாட்டு மாட்டுக்காக குரல் கொடுக்காதவன் வீரன் அல்ல; விவசாயிக்காக குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல; மரத்தை மறந்தவன் மனிதனே அல்ல! pic.twitter.com/ljHr1QLhS0
— Vivekh actor (@Actor_Vivek) January 7, 2017
இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக “கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற பாடலை இசையமைத்து வெளியிட இருப்பதாகவும் அந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானத்தை கஷ்டப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்போவதாகவும் டுவிட்டரில் அறிவித்து இருக்கிறார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
