ஒரு வழியாக ஜகமே தந்திரம் பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய தனுஷ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரித்த படம் ஜகமே தந்திரம். கொரானா தொற்று காரணமாக திரை அரங்க ரிலீஸை தவிர்த்து நெட் பிலிக்சிடம் படத்தை விற்றுவிட்டனர். இதோ, அதோ என பட ரிலீஸை தள்ளி சென்ற அவர்கள் படத்தை ஜூன் 18 ரிலீஸ் செய்கின்றனர்.

படம் தியேட்டர் ரிலீஸ் ஆகாதது தனுஷுக்கு பெரிய வருத்தம் தான் என விஷயம் தெரிந்தவர்கள் முன்பே சொன்னார்கள். தயாரிப்பு தரப்பிடம் கூட தனுஷ் பேசினார், ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் கிசு கிசுக்கப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல தனுஷும் ட்விட்டரில் கர்ணன் பற்றி ட்வீட் செய்தார், ஜகமே தந்திரம் பற்றி கண்டுகொள்ளவில்லை. அவர் அப்படத்தை கைகழுவிவிட்டார், அதனால் தான் அவர் எழுதி, பாடிய பாடல் பற்றி கூட பெரிதும் அக்கறை காட்டவில்லை என்றனர்.

எனினும் இன்று தனுஷ் ட்ரைலர் லிங்க் ஷேர் செய்து பின்வருமாறு ட்வீட் செய்துள்ளார். “மிகப்பெரிய திரை அரங்க அனுபவமாக இருந்திருக்கும், ஆனால் நெடிப்பிலிக்சில் வருகிறது. எப்படி இருப்பினும் நீங்கள் சுருளி மற்றும் ஜகமே தந்திரம் பார்த்து மகிழுங்கள்.” என பதிவிட்டு இயக்குனர் மற்றும் இசை அமைப்பாளரை மட்டும் டேக் செய்துள்ளார்.

dhanush tweet

சில நெகட்டிவிட்டி ஆசாமிகள் நெட் பிலிக்ஸ் தரப்பு கொடுத்த அழுத்தம் தான் காரணம் என உளறி வருகின்றனர்.  ஆனால் தனுஷ் போன்ற பிரபல நடிகர் சுமுகமாக தனது ஆதங்கத்தை மறந்து பெருந்தன்மையாக நடந்துகொண்டார்.

இது அவரது நண்பர்கள், சினிமா விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்காக அவர் எடுத்த முடிவு என்பது மட்டும் உறுதி.