ஜகமே தந்திரம் சுமாராத்தான் இருக்கும்.. சூசகமாக சொன்ன தனுஷ்

தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் முதல்முறையாக உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனாலும் அவரது முந்தைய படங்களான அசுரன் மற்றும் கர்ணன் போன்ற அளவுக்கு வரவேற்பு இல்லை என்பது போன்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் இதுவரை ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளருக்கும் தனுஷுக்கும் இருந்த சண்டை ஒருவழியாக சமாதானமாகி சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அப்போது அவர் கூறிய விஷயத்தை ரசிகர்கள் மனதில் ஆழமாக எடுத்துக் கொண்டுள்ளனர். ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம், தியேட்டரில் பார்க்கும் போதுதான் அந்த படத்துடைய உண்மை தன்மை வெளிப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தியேட்டரில் கொண்டாடப்படும் அளவுக்கு ஓடிடி தளத்தில் இந்த படம் கொண்டாடப்படுமா என்பது தெரியவில்லை என்பது போன்றும், டிவி மற்றும் செல்போன்களில் பார்த்தால் படம் சுமாராக இருக்க வாய்ப்பு அதிகம் எனவும் சூசகமாக சொல்லி உள்ளார் தனுஷ்.

அவர் போட்ட ஒரு பதிவிலிருந்து இப்படி பல விஷயங்களை திரித்து கோலிவுட் வட்டாரங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லர் தற்போது யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வருகிற ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாக உள்ளது.

jagame-thandhiram-cinemapettai
jagame-thandhiram-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்