புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தனுஷ், நயன்தாரா, சிம்பு, SK என குவிந்த பிரபலங்கள்.. யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

Dhanush: தமிழ் சினிமாவில் ஆகாஷ் பாஸ்கரன் என்று ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார், அவருக்கு திருமணம் என்பது தனுஷ் நயன்தாரா பிரச்சனையால் தான் நம்மளுக்கு தெரியும். சரியாக பஞ்சாயத்து கிளம்பி நான்கு நாட்களில் தனுஷ் மற்றும் நயன்தாராவை ஒரே இடத்தில் அமர வைத்து விட்டார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்.

அது மட்டும் இல்லாமல் தனுஷ் மற்றும் சிம்பு கலந்து கொண்டதால் இவருடைய சங்கீத் பங்க்ஷனும் நேற்று முதல் பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. தனுஷ், சிவகார்த்திகேயனை பார்த்து பேசியது, அனிருத் – சிவகார்த்திகேயன், நயன்தாரா – சிவகார்த்திகேயன் என ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழாவில் எடுத்த அத்தனை புகைப்படங்களுமே சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

ஆகாஷ் பாஸ்கரன் தனுஷின் இட்லி கடை படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய திருமணத்திற்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி எதற்காக வந்தார்கள் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்.

ஆகாஷ் பாஸ்கரன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அது மட்டும் இல்லாமல் விக்னேஷ் சிவன் இயக்கிய பாவ கதைகள் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், இப்போது தனுஷ் படத்தை தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

- Advertisement -

Trending News