வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025

தனுசை போலவே மாறிவரும் மூத்தமகன் யாத்திரா.. டிரெண்டாகும் புகைப்படம்

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சினிமாவை தாண்டி தனது மகன்களுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார் தனுஷ். சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதேபோல் அவ்வப்போது அவர் எடுத்து வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சியாக இருப்பது போன்ற கமெண்ட் களையும் பதிவு செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஐஸ்வர்யா ஒருபுறம் தனது வேலையில் மும்முரமாக இறங்கி பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

ஒருவேளை தன்னால் சுதந்திரமாக தன் வேலையை பார்க்க முடியாது என்பதற்காக தான் ஐஸ்வர்யா விவாகரத்து வரை சென்று முடிவெடுத்துள்ளார் என்பதும் தற்போது சந்தேகமாக தான் உள்ளது. சமீபத்தில் இளையராஜாவின் கச்சேரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் மற்றும் அவரின் மகன்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இளையராஜா ராக் வித் ராஜா எனும் கச்சேரியை நடத்தினார். இதில் கலந்து கொண்ட தனுஷ் தனது அனுபவங்களை பற்றி வெளிப்படையாக கூறினார். மேலும் தனது மகன்களான யாத்ரா லிங்கா உடன் வந்து கச்சேரியை பார்த்து ரசித்தார்.

அப்போது தனுஷ் மேடையேறி தனது மகன்களான யாத்திரா லிங்காவிற்கு ஒரு பாடல் பாடுவதாக கூறி இவரே எழுதிய பாடலை பாசத்துடன் பாடினார். இப்பாடலை கேட்ட யாத்ரா லிங்கா உட்பட அனைவரும் கைதட்டி தனுஷை பாராட்டினர்.

dhanush son
dhanush son

தற்போது தனுஷ் மகன்களான யாத்ரா லிங்கா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தில் தனுஷை விட அவருடைய மகன்கள் வளர்ந்து விட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் தனுசுக்கு இவ்வளவு பெரிய மகன்களா என ஆச்சரியத்தில் உள்ளனர்.

Trending News