புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வெட்கமா இல்லையா?. விக்கி-நயன் விஷயத்தில் ராதிகாவிடம் பாய்ந்த தனுஷ்!

Nayanthara: நேற்றிலிருந்து தனுஷ் – நயன்தாரா பஞ்சாயத்து தான் இணையதளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. 3 செகண்ட் வீடியோவை 24 மணி நேரத்தில் நீக்காவிட்டால் பத்து கோடி அபராதம் தர வேண்டும் என தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

என்ன பண்ணாலும் நான் செய்றதா தான் செய்வேன் நயன்தாரா தரப்பு அந்த வீடியோவோட இன்று டாக்குமென்ட்ரி வீடியோவை ரிலீஸ் செய்திருக்கிறது. இதற்கு இடையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பஞ்சாயத்தில் நடிகை ராதிகாவை, தனுஷ் டோஸ் விட்ட சம்பவம் தற்போது வெளியாகி இருக்கிறது.

ராதிகாவிடம் பாய்ந்த தனுஷ்!

இவங்க இரண்டு பேரும் விஷயத்துக்கு எதுக்கு ராதிகா திட்டு வாங்கணும்னு எல்லாருக்கும் சந்தேகம் வரும். நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி அம்மாவாக நடிகை ராதிகா தான் நடித்திருந்தார். நயன்தாரா மற்றும் ராதிகா இருவரும் இருக்கும் காட்சிகள் கொஞ்சம் தான் அந்த படத்தில் வரும்.

படப்பிடிப்பு முடியும் வரை ராதிகாவுக்கு விக்னேஷ் மற்றும் நயன்தாரா காதலிப்பது தெரியாதாம். அப்போது தனுஷ் ஒருமுறை போன் பண்ணி பட சூட்டிங் எப்படி போச்சு என்று ராதிகாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ராதிகா நல்லா தான் போச்சு, எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

அப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலிப்பது உங்களுக்கு தெரியுமா? இரண்டு பேரும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க போறாங்கலாமே என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராதிகா பொய் சொல்லாத, நான் அங்கே தானே இருந்தேன், அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு தனுஷ் உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா, இத்தனை வருஷமா சினிமாவில் இருக்கிறேன் என்று சொல்கிறீர்களே, இதெல்லாம் கூட உங்களுக்கு கண்டுபிடிக்க தெரியாதா என விளையாட்டாக கேட்டிருக்கிறார். இந்த விஷயத்தை ராதிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். தனுஷ் மற்றும் நயன்தாரா பஞ்சாயத்து நேற்று இணையதளத்தில் பரபரப்பாக இந்த இன்டர்வியூ வீடியோவும் இப்போது வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

Trending News