பிரச்சனைக்குரிய டைட்டிலை கையில் எடுக்கும் தனுஷ்.. கொஞ்சம் மரியாதை கொடுங்க

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பு தவிர இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்ற பன்முகத் திறமை கொண்டவர்.

இப்போது தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வரும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் தனுஷ் ப்ரொஃபஸராக நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளார். வரும் ஜனவரி 2022இல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது மேலும் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஏற்கனவே தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று கோடிகளில் வசூலை அள்ளிய திரைப்படம் மாஸ்டர். அந்தப் படத்திற்கு முதலில் வாத்தி என்ற தலைப்பு வைக்க இருந்தது. ஆனால் வாத்தி என்று கூறுவது மரியாதையாக இருக்காது என்று பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டது.

தற்போது தனுஷ் தன்னுடைய படத்திற்கு வாத்தி என்று பெயர் வைத்துள்ளதால் நிச்சயம் இப்படம் பல சர்ச்சைகளை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர தனுஷின் நடிப்பில் அத்ரங்கி ரே என்னும் இந்தி படம் தமிழில் டப் செய்யப்பட்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக ஓடிடியில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்