fbpx
Connect with us

Cinemapettai

தொடர்ச்சியாக 4 படங்களின் இரண்டாம் பாகத்தில் தனுஷ்.. அட! இதெல்லாம் நம்ம லிஸ்ட்லயே இல்லையே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடர்ச்சியாக 4 படங்களின் இரண்டாம் பாகத்தில் தனுஷ்.. அட! இதெல்லாம் நம்ம லிஸ்ட்லயே இல்லையே

ஆங்கில படங்களில் மட்டுமே ஒரு படத்தின் பல பாகங்கள் வெளியாகி வந்தன. இப்போது தமிழ் படங்களிலும் ஒருமுறை வெற்றி பெற்ற படம் பல பாகங்களாக தயாராகி வருகின்றன. சூர்யா நடித்த சிங்கம் படம் பல பாகமாக வெளிவந்து வெற்றிநடை போட்டது. சென்னை-28, பசங்க உள்ளிட்ட படங்களும் இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி (வி.ஐ.பி), மாரி ஆகிய படங்களும் இரண்டு பாகங்களாக உருவானது. இதில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் சரியாக போகவில்லை.

பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த மாரி படத்தின் இரண்டாம் பாகம் ஓரளவு ஓடியது. இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதேபோல், துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கொடி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

அடுத்து ஆயிரத்தில் ஒருவன், புதுபேட்டை, திருவிளையாடல் ஆரம்பம் படங்களும் இரண்டாம் பாகங்களில் தனுஷ் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top