Connect with us

Cinemapettai

தொடங்கியது D 41! சிம்பிள் லுக்கில் தனுஷ்.. பட கதை இது தான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடங்கியது D 41! சிம்பிள் லுக்கில் தனுஷ்.. பட கதை இது தான்

2020 முழுவதும் தனுஷ் படங்கள் தான் ரிலீஸ் என்பது போன்ற சூழலில் உள்ளது கோலிவுட். தொடர்ந்து ஐந்து படங்கள் ரெடி ஆகப்போகிறது. பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படம் பட்டாஸ். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் (சுருளி- கேங்ஸ்டர் படம்) நடித்துவிட்டார். படம் போஸ்ட் ப்ரொடக்ஷனில் உள்ளது.

தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் பட ஷூட்டிங் திருநெல்வேலியில் துவங்கியுள்ளது. லால், ரஜீஷா விஜயன், நட்டி (எ) நட்ராஜ், அழகப்பெருமாள் யோகி பாபு நடிக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசை. எடிட்டிங் செல்வா. தயாரிப்பு கலைப்புலி தாணு. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

D 41

இப்படத்தின் தலைப்பு கர்ணன் என்கின்றனர் ஒரு சிலர். மேலும் மாஞ்சோலை டீ எஸ்டேட் மற்றும் அதன் அரசியலை சார்ந்த படம் என்கின்றனர் கோலிவுட் பட்சிகள். 1999ல் நடந்த போராட்டம் மற்றும் மாஞ்சோலை படுகொலை பற்றியதாம்.

D 41

முன்பு கைது செய்தவர்களை ரிலீஸ் செய்ய வேண்டும், 70 ரூபாய் தினக்கூலியை 100 ஆக உயர்த்த வேண்டும், கர்பகாலத்தில் விடுமுறை என கோரிக்கைகளை வைக்க திருநெல்வேலியில் இவர்கள் ஊர்வலம் செல்ல, போலீஸ் லத்தி சார்ஜ் செய்தனர். அதில் இருந்து தப்பிக்க முயலும் சமயத்தில் ஆற்றில் மூழ்கி 17 நபர்கள் இறந்தனர். (இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு வயது குழந்தை உட்பட.)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top