Tamil Cinema News | சினிமா செய்திகள்
விசு போட்ட போடில் வெலவெலத்துப் போன தனுஷ்.. தெரியாம கூட அதை செய்ய மாட்டேன் என புலம்பல்
சமீபகாலமாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் விஷயம் என்றால் தனுஷ் நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாகவும், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் யாரிடமும் உரிய அனுமதி பெறாமல் படத்தின் வேலைகளை பார்த்து வருவதாக நடிகர் மற்றும் இயக்குனர் விசு தனுசை நேரடியாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த நெற்றிக்கண் படம் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மாமனார் நடித்த படத்தை தனுஷ் ரீமேக் செய்ய விரும்புவதாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விசு, உடனடியாக தனுசை தாக்கி பேட்டி கொடுத்திருந்தார்.
கவிதாலயா நிறுவனம் நெற்றிக்கண் படத்தை தயாரித்தது. அதில் எழுத்தாளராக பணியாற்றிய விசு அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு விட்டதாகவும், நெற்றிக்கண் படத்தைப் பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை எனவும் நேரடியாக விளக்கம் கொடுத்தது.
இருந்தும் தனுஷ் தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியிடாததால் பதற்றம் நிலவியது. மேலும் இதனால் தனுஷ் மற்றும் ரஜினிக்கு இடையில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் எனவும் கோலிவுட் வட்டாரம் கிசுகிசுத்தது.
ஆனால் தற்போது தனுஷ் நேரடியாக விசுவுக்கு போன் செய்து நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனவும், மீண்டும் இந்த விஷயத்தை பற்றி பேச வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதனால் தற்போது நெற்றிக்கண் சமாச்சாரம் சற்று அடங்கி உள்ளது.
