Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்த தனுஷ்.. சும்மா கிழிக்க போகும் கூட்டணி
நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை இவர் நடித்துள்ள 167 படங்களில் 100 படங்களுக்கு மேல் வெற்றியை பெற்றுள்ளது என்பதுதான் இவர் சூப்பர் ஸ்டார் என்பதற்கு அடையாளம்.
இந்நிலையில் அப்படி வெற்றி பெற்ற நெற்றிக்கண் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நெற்றிக்கண், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான திரைப்படம் என அவரே நிறைய இடங்களில் கூறியுள்ளார்.
ரஜினி, அப்பா மகன் என இரட்டை வேடங்களில் போட்டி போட்டு அசத்திய திரைப்படம் நெற்றிக்கண். இதில் ரஜினிக்கு ஜோடியாக சரிதா, மேனகா போன்றோர் நடித்திருந்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக தனுஷ் ரஜினியின் திரைப்படங்களை ரீமேக் செய்ய வேண்டும் என பொது மேடைகளில் கூறி வந்தது அனைவரும் அறிந்ததே.
சில வருடங்களுக்கு முன்பு ரஜினியின் பட தலைப்புகளை தொடர்ந்து தன் படங்களுக்கு வைத்து வந்தார். அதில் சில பொல்லாதவன் மாப்பிள்ளை தங்கமகன் போன்றவையாகும். அப்பாவாக தனுஷ் செட் ஆவாரா என்பதற்கு அசுரன் ஒரு சான்று.
இருந்தும் வில்லத்தனமான அப்பா என்றால் சற்று யோசிக்கத்தான் வேண்டும். தனுஷின் நடிப்பின் மீதுள்ள நம்பிக்கையால் தனுஷ் இந்த முடிவை எடுத்திருப்பது தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடமும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார் எனவும் கோலிவுட்டில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாமாவா? மாப்பிள்ளையா? பொறுத்திருந்து பார்ப்போம்!
