செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அமரன் படத்தை பார்த்த உடனே தனுஷ் போட்ட உத்தரவு.. செம காண்டில் சிவகார்த்திகேயன்

தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். சேகர் கம்முலா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் தனுஷின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகராக கலக்கி வந்த தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குனர் அவதாரமும் எடுத்தார். இதனையடுத்து சமீபத்தில் வெளியான தனது 50 வது படமான ராயனுக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்பினார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து, புது முகங்களை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். காதல் படமாக உருவாகியுள்ள ‘NEEK’ படத்தை சீக்கிரமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தனுஷ் உத்தரவு போட்டுள்ளார். அதனால் பட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அமரன் பட வெற்றியை பார்த்து தனுஷ் செய்த செயல்

சமீபத்தில் வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் வர்த்தக நிபுணர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதன் இறுதி வசூலில் கண்டிப்பாக ஷேர் தொகை 60 கோடியைத் தாண்டும் என கணித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க தனுஷ் அதிரடி முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்ப அடுத்த படம் நமக்கு இல்லையானு சிவகார்த்திகேயனுக்கும் லைட்டா எரிச்சல்தானாம்.

ஏற்கனவே தனுஷ் லைன் அப்பில் பல படங்கள் உள்ளன. போர் தொழில் இயக்குனரின் ஆரம்பித்து லப்பர் பந்து இயக்குனர் வரை அனைத்து இயக்குநர்களுடனும் கூட்டணி போடவுள்ளார். இந்த நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் இவர் நடிப்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

- Advertisement -

Trending News