100 கோடி வசூலை தாண்டியதால் எகிறிய தனுஷ் மார்க்கெட்.. எக்கச்சக்கமாக உயர்த்திய சம்பளம்

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பக்கா எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக வெளிவந்துள்ள இந்த திரைப்படத்திற்கு தற்போது நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திரைப்படம் தியேட்டரில் வெளியானதையொட்டி அவருடைய ரசிகர்கள் பலத்த வரவேற்பை கொடுத்துள்ளனர்.

Also read : ஐஸ்வர்யா போல தனுசுக்கு பெண் பார்த்து இருக்கும் செல்வராகவன்.. புது ஜோடி சூப்பர்

அந்த வகையில் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை பெற்று வருகிறது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் தியேட்டரில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த வகையில் இந்த படம் தற்போது 100 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியால் தனுஷ் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக தனுஷ் 15 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருந்தார்.

Also read : பாக்ஸ் ஆபிஸை கலக்கும் 5 படங்கள்.. தரமான சம்பவம் செய்த திருச்சிற்றம்பலம்

தற்போது இப்படம் எதிர்பார்த்ததை விட அதிக கலெக்ஷனை பெற்றுள்ளதால் அவர் தன் சம்பளத்தை கிட்டத்தட்ட 50% அதிகப்படுத்தி விட்டாராம். அதாவது 22-25 கோடி வரை சம்பளம் கேட்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனி அவர் நடிக்க இருக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு தற்போது நிர்ணயித்துள்ள சம்பளத்தை தான் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இது சில தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் சினிமா வட்டாரத்தை பொருத்தவரையில் தனுஷின் இந்த முடிவு புத்திசாலித்தனமான முடிவு தான் என்று கூறுகின்றனர். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த அவருக்கு இந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் அவருடைய அடுத்த அடுத்த திரைப்படங்களுக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

Also read : கோடிகளை இறைக்கும் திருச்சிற்றம்பலம்.. வசூல் சக்கரவர்த்தியாக தனுஷ்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்