Raayan Collection: தனுஷ் இயக்கி நடித்த ராயன் அவரது 50வது படம் என்ற சிறப்போடு கடந்த மாதம் வெளிவந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தில் எஸ் ஜே சூர்யா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அதனாலயே ரசிகர்கள் படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர். இதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட் மூஞ்சி போன்ற பாடல்கள் ரிலீசுக்கு முன்பே ரசிகர்களை கொண்டாட வைத்தது தான்.
இப்போது சோஷியல் மீடியாவை திறந்தாலே வாட்டர் பாக்கெட் பாடலின் ரீ கிரியேஷன் ரீல்ஸ் தான் வைரலாகி வருகிறது. இப்படி ட்ரெண்டிங்கில் கலக்கி கொண்டிருக்கும் ராயனுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் குவிந்தது.
ராயன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
அந்த வகையில் தற்போது வரை ராயன் 150 கோடிகளை உலகம் முழுவதிலும் வசூலித்துள்ளது. இந்த வருடத்தின் ஆரம்பம் சரியாக இல்லாத நிலையில் அரண்மனை 4 வெளியாகி தமிழ் சினிமாவை மீட்டெடுத்தது.
அதையடுத்து கருடன், மகாராஜா போன்ற படங்களும் வசூலில் மாஸ் காட்டியது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 வெறும் 148 கோடிகளை மட்டுமே வசூலித்து மொக்கை வாங்கியது. அதை வைத்து பார்க்கும் போது ராயன் இந்தியன் தாத்தாவை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.
மேலும் எல்லா நடிகர்களுக்கும் 50வது படம் மாஸ் ஹிட் ஆக அமைவதில்லை. அந்த வரிசையில் அஜித்துக்கு ஒரு மங்காத்தா என்றால் விஜய் சேதுபதிக்கு ஒரு மகாராஜா. கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் 107 கோடிகளை தட்டி தூக்கி இருந்தது.
அந்த வகையில் தனுஷ் மகாராஜாவை ஓவர் டேக் செய்து தன் வெற்றியை பதிவு செய்திருக்கிறார். அதனால்யே சமீபத்தில் பிரியாணி விருந்து கொடுத்ததோடு ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து ஒரு பாடல் வீடியோவை வெளியிட்டு அவர் தன் நன்றியை காட்டியது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் வசூல் சாதனை செய்த ராயன்
- தனுஷை டார்கெட் செய்ய ராயன் தான் காரணம்
- 120 கோடி வசூலை அள்ளிய மொட்ட தல ராயன்
- முதுகில் குத்தப்பட்ட தனுஷ், விஷால்