Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதுவரை OTT-யில் வெளிவந்த 6 தனுஷ் படங்கள்.. உங்க பேவரிட் எது.?

dhanush-cinemapettai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சமீபகாலமாக பெரிய அளவு வெற்றி பெறாமல் சுமாரான வெற்றியைப் பதிவு செய்து வருகின்றன. ஆனால் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் OTT தளத்தில் வெளியாகி உள்ளன அது என்னென்ன படங்கள் என்பதை பார்ப்போம்

ஜகமே தந்திரம்

சமீபத்தில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் பெரிதாக எதிர்பார்த்திருந்த அனைத்து ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தையே ஏற்றி விடுகிறது.நெட்ப்ளிக்ஸ் ரிலிசான இப்படத்தின் ப்ரோமோவும் படத்தில் இடம்பெற்ற ரகிட ரகிட பாடலும் அகில இந்திய தனுஷ் ரசிகர் கூட்த்தை பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளாக்கியது.

jagame-thandhiram-01

jagame-thandhiram-01

இப்படத்தினை இனி எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் பார்த்துக்கொள்ள முடியும்.

கர்ணன்

இயக்குனர் மாரி செல்வராஜின் அட்டகாமான படைப்புகளில் ஒன்றாகியது தனுஷ் நடித்த கர்ணன் பழமை மாறாத கிராமமும் சற்றே வித்யாசமாக புதுமையாக சிந்திக்கும் கதாநாயகனும் என படத்தின் காட்சிகள் விருவிரு என வீரநடை போட்டது என்றே சொல்லலாம்.

karnan-dhanush

karnan-dhanush

இணையத்தில் பாடல்களாலும் கதைக்கரு மற்றும் படமாக்கப்பட்ட விதத்தாலும் வெற்றி கண்ட இப்படமும் ஆன்லைனில் கிடைக்கும்.

ரஞ்சனா

ஒய் திஸ் கொலை வெறி பாடலால் கோலிவுட்டிலிருந்த தனுஷை தானாக வரவழைப்பு தந்தது பாலிவுட். தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரிலும் இந்தியில் “ரஞ்சனா” என்ற பெயரிலும் சோனம் கபூருடன் தனுஷ் நடித்து வெளியான படம் இது. குட்டி படம் எடுக்கப்பட்ட கதையில் சற்றே மாற்றியமைத்த படம்.

raanjhanaa

raanjhanaa

முக்கோண காதல் கதையான இப்படம் பெருமளவு வரவேற்பை பெற்றது இந்தியில் தான் இப்போது இந்த படமும் அமேசான்ப்ரைமில் கிடைக்கும்.

தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் ஃபக்கீர்

the extraordinary journey of the fakir full movie

the extraordinary journey of the fakir full movie

தனுஷ் ரசிகர்கள் உட்பட பலரும் அறிந்திராத படம் “தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் ஃபக்கீர்”

அப்பாவை தேடி வெளிநாடு செல்லும் ஃபக்கீர் அங்கே கதாநாயகியை பார்க்கிறார் காதல் வயப்பட்ட ஃபக்கீர் அப்பாவை கூட்டி வந்தாரா அவரின் காதல் கைகூடியதா என்பதே கதையின் கரு. இப்போது இந்த படமும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

வடசென்னை

vadachennai-cinemapettai

vadachennai-cinemapettai

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் தனுஷ் மீண்டும் இணைந்த படம் “வடசென்னை”. தனுஷ் வெற்றி மாறன் கூட்டணி என்றாலே பிளாக்பஸ்டராகும் என்கிற மாபெரும் எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட டபுள் டிரீட். மாஸ் ஹிட்டடித்த இந்த படமும் இப்போது அமேசான் ப்ரைமில் கிடைக்கிறது.

அசுரன்

asuran

asuran

தனுஷ் நடிப்பில் சிறு குறு விவசாயிகளுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெரிய முதலாளிகளும் அவர்கள் இவர்களது சிறிய இடங்களை கூட விட்டு வைக்காமல் வாங்க நினைப்பதும் என கதையும் கருவும் படத்தின் மாபெரும் வெறாறிக்கு வித்திட்டது.

தனுஷ் மீது அழுத்தப்படும் பிரச்சனைகள் என்ன அவர் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார். அழகான அளவான குடும்பத்தின் குறைகள் களையப்பட்டதா இதுவே இப்படத்தின் எஞ்சியிருக்கும் கதை.

இவை எல்லாவற்றையும் சரியாக எல்லோருக்கும் புரியும்படி திரைக்கதையில் படத்தை சேர்த்திருப்பார் இயக்குனர். இப்போது இந்த வெற்றிப்படமும் ஆன்லைனில் கிடைக்கும்….

Continue Reading
To Top