அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த ராயன்.. இரட்டை குதிரையில் சவாரி செய்யும் தனுஷின் கையில் இத்தனை படங்களா.!

Dhanush: தனுஷ் இப்போது ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கி நடித்த ராயன் வெளிவந்து பல கோடிகளை வசூலித்து லாபம் பார்த்தது. அதை அடுத்து இவருடைய கைவசம் இப்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன.

அவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. அது மட்டும் இன்றி இனி இயக்குனராகவும் ஜொலிக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருக்கிறார். அதனால் நடிப்பு ஒரு பக்கம் இயக்கம் ஒரு பக்கம் என இரட்டை குதிரைகளில் சவாரி செய்ய அவர் தயாராகி விட்டார்.

அதன்படி அடுத்ததாக அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா வெளிவர இருக்கிறது. இதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதை அடுத்து இளையராஜாவின் பயோபிக் படமும் அவர் கைவசம் இருக்கிறது.

மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்திலும் தனுஷ் தான் ஹீரோ. ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் கர்ணன் வெளியாகி வெற்றி பெற்றது. இதை அடுத்து ஹிந்தியில் தனுஷ் நடிக்கும் tereIsqMein படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் கைவசம் இருக்கும் படங்கள்

இது தவிர அவருடைய இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் சத்தம் இல்லாமல் உருவாகி வருகிறது. பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் என ஏகப்பட்ட இளம் பட்டாளங்கள் இதில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இதன் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்குவதற்கும் தனுஷ் தயாராகி விட்டார். அதன்படி அவருடைய இயக்கத்தில் உருவாக போகும் நாலாவது படத்தில் அவர்தான் ஹீரோவாக நடிக்கிறார்.

அறிமுக தயாரிப்பாளர் ஆகாஷ் தயாரிக்கும் இப்படத்தில் அருண் விஜய் வில்லன் கேரக்டரில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் இவரின் வில்லன் கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது.

அதேபோல் இப்படத்திலும் அவருக்கு ஹீரோவுக்கு இணையான கேரக்டர் என்பதால் மறுக்காமல் சம்மதம் தெரிவித்து விட்டாராம். அதை தொடர்ந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அசோக் செல்வனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எப்படியும் இன்னும் சில தினங்களில் இது உறுதி செய்யப்பட்டு விடும். மேலும் 120 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் ராயனைப் போல் தனுசுக்கு பெரும் வெற்றியாக அமையும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் தனுஷ்

- Advertisement -spot_img

Trending News